வருடத்திற்கான ஐ.சி.சி விருதுகளை பெறவுள்ள அதிசிறந்த வீரர்கள், நடுவருக்கான பட்டியல்!

0
119

சர்வதேச கிரிக்கெட் பேரவை வருடத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை மற்றும் சிறந்த நடுவர்களுக்கான விருது வழங்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், வருடத்திற்கான அதிசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாக்கிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் பெற்றுள்ளார்.

குறித்த விருதினை பாபர் அசாம் இரண்டாவது முறையாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.வருடத்திற்கான அதிசிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி விருதை இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.இதேவேளை, சிறந்த நடுவராக இங்கிலாந்து நாட்டின் ரிச்சர்ட் இலிங்வேர்த் ஐ.சி.சி யினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வருடத்திற்கான அதிசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்து அணியின் நட்டாலி சிவரையும், டி20 வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் தஹிலா மெக்ராவையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here