நெஞ்சு சளி, வறட்டு இருமல் ஆகியவை வந்தால் மருந்து மாத்திரையை வாங்கி போட்டு உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து விடுவோம். ஆனால் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றும்போது உள்ளுக்குள் இருக்கும் சளியை முழுமையாக வெளியேற்ற முடியும்.
வறட்டு இருமலை விரட்ட காலங்காலமாக பின்பற்றப்படும் ஒன்று தான் நண்டு ரசம்.
நண்டு ரசம்
தேவையான பொருள்கள்
நண்டு – அரை கிலோ
இஞ்சி – 2 இன்ச் அளவு
பூண்டு – 20 பல்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
அன்னாசி பூ – 1
வால் மிளகு – கால் தேக்கரண்டி அளவு
திப்பிலி – கால் தேக்கரண்டி அளவு
மிளகு – அரை தேக்கரண்டி அளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி அளவு
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி அளவு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி அளவு
துளசி இலை – 20 இலை
செய்முறை
காரசாரமான நண்டு ரசம் செய்ய முதலில் தோல் சீவிய இஞ்சி, பூண்டு, மிளகாய், சின்ன வெங்காயம், மிளகு, வால் மிளகு, திப்பிலி, அன்னாசி பூ, சீரகம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மை போல அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்து அதோடு அரைத்து வைத்திருக்கும் கலவையை கலந்து ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்
பின்பு அதில் கொஞ்சமாக மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள், துளசி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.நன்கு கொதிக்கும்போது அதில் லெமன் சாற்றை சேர்த்து ஒரு கொதி வந்தால் நண்டு ரசம் தயாராகி விடும்.
வறண்ட இருமல், தொடர்ச்சியான இருமல், நாள்பட்ட நெஞ்சு சளி ஆகியவற்றை சரிசெய்யவும், கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கவும் இந்த ரசம் உதவி புரியும்.