வற் வரி திருத்தங்கள் குறித்து கண்டறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வற் வரி திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து மற்றும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்து என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை காணப்படுகிறது என அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
வற் வரி திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. மற்றையது பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.