வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.மட்டகளப்பு பகுதியில் இருந்து உடபுசல்லாவ பகுதிக்கு திருமண வீட்டுக்கு வருகை தந்து மீண்டும் மட்டகளப்பு நோக்கி செல்லும் வழியில் மாவுவா பகுதியில் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 27 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டு இதில் பலத்த காயம் ஏற்பட்ட ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டன .
விபத்து தொடர்பாக வலப்பனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
டி சந்ரு