வவுனியா மாவட்டத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் அமைந்துள்ள பெரும் மதகொன்றின் கீழிருந்து ஆணின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த 48 வயதான பாக்கியம் ஜஸ்டின் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.இவரை புதன்கிழமை மாலையில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இது ஒரு கொலையா? மதுபோதையில் தவறி வீழ்ந்தாரா? என வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.