வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

0
82

வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இலங்கையில் வாகன இறக்குமதியாளர்கள் பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகி வருகின்றனர்.

அவர்கள் ஏற்கனவே சந்தை தேவை, இந்த நாட்டில் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பிற நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

வரும் ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கை கார் இறக்குமதியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சரும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக நம்புவதாகவும் அதற்கான குழு பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here