2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதுதவிர நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை 1337 பஸ்களை வழங்கியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பஸ்கள் மூலம் தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்வதுடன், பாதுகாப்பு பிரிவு பணிகளுக்காகவும் இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும்.