வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை

0
30

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசியை எடுத்துச் செல்ல ஏற்கனவே இருக்கின்ற தடையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here