வாக்குப்பெட்டிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0
17

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள்.வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி 3 அளவுகளில் அட்டைப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அரச அதிகாரிகளுக்கு அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு, அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து, குறிப்பிட்ட நாளில் பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here