இலங்கை சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி “கோட்டாபய ராஜபக்ஷ” அவர்களின் “சௌபாக்கியா தொலைநோக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் ,தோட்டவீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பண்முகப்படுத்தப்பட் நிதியொதுக்கீட்டின் கீழ் நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட கல்வே பிரதேசத்திற்கான வாசிகசாலை அமைக்கப்பட்டு ,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் பங்குப்பற்றலுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.,
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் மற்றும், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்,கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த், தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் பாரதிதாசன் , அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் மற்றும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் என எனப் பலர் கலந்துக் கொண்டனர்.
க.கிஷாந்தன்