2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு கேள்வி பத்திர விடயத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முழுமையாக மறுத்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்சார மையத்துக்கான கேள்விப்பத்திரக் கோரலுக்கு தாம் பொறுப்பான அமைச்சர் அல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் பாட்டலி மீது நேற்று சுமத்திய குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
நாணயக்காரவின் குற்றச்சாட்டின்படி நிலக்கரி கொள்வனவு கேள்விப்பத்திர விடயத்தில் குறைந்த விலை கேள்விப்பத்திரத்தை அமைச்சர் பாட்டலி ஏற்றுக்கொண்டு கூடிய விலை கேள்விப்பத்திரத்தை நிராகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்
எனினும் இதனை மறுத்துள்ள பாட்டலி, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி கேள்விப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.