வாடிக்கையாளர்கள் இல்லை : மூடப்படும் நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகள்

0
47

வாடிக்கையாளர்கள் வரவு குறைந்த காரணத்தால் நாடு முழுவதும் உள்ள ஐநூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இல்லாத காரணத்தால் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க முடியாமல் உள்ளதாக பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளே மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 75% குறைந்துள்ளதாக வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால், தற்போதைய வருமானத்தின் அடிப்படையில் பணியாளர்களை பராமரிப்பது கடினம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.சில கடைக்காரர்கள், பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு தினசரி கொடுப்பனவைக் கூட கொடுக்க முடியாமல், சில நேரங்களில் கடைக்காரர்கள் கொடுக்கும் காசோலைகளில் பணம் இல்லாததால், கடைக்காரர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here