வாழ்வதற்கு வழியில்லாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்

0
100

கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார பிரச்சினையினால் உணவினை பெற்றுக்கொள்ள முடியாத கஷ்டத்தால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

களுகல பிரதேசத்தை சேர்ந்த தன் கணவருடன் வசித்து வந்த, 74 வயதான முதிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த தம்பதியினரின் ஒரே மகள் றம்புக்கனை பிரதேசத்தில் வசித்து வருகிறார்.
மாந்திரீக வேலை செய்து சிறியளவில் பணத்தை சம்பாதித்து கண்ணுக்கும், அண்மையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக நடக்க முடியாமல் போனதால், வருமானம் இல்லாமல் போயுள்ளது.

இந்த தம்பதியினருக்கு முதியோர் கொடுப்பனவாக 1900 ரூபாவும், கமத்தொழிலாளர் ஓய்வூதியமாக 1950 ரூபாவும் என மொத்தமாக 3850/= ரூபா மாத்திரமே கிடைத்து வந்துள்ளது.

பொருட்கள் விற்பனை செய்யப்படும் விலைக்கு அமைய அந்த பணத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என்பதால், பெண்மணி பல நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்றைய தினம் வீட்டில் இருந்த விஷ திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கணவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here