விசேட வைத்தியர்களாக பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

0
103

பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

“பயிற்சி பெற்ற விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. ஒரு விசேட வைத்தியருக்கு பயிற்சி அளிக்க பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

ஏனெனில் தற்போது ஆட்சேர்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விசேட வைத்தியர்ககளை நியமிக்கும் திறன் எங்களிடம் உள்ளது.

எதிர்காலத்தில் பெருமளவிலான விசேட வைத்தியர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். அந்த குழுவின் வருகையால் இந்த மோதல் சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன்.

சுமார் 600 வைத்தியர்கள் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இந்தக் குழுவிலிருந்து சிலர் வருவதில்லை. ஆனால் 50% வருவதால் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்கும். இன்னும் ஒரு வருடத்தில் அவர்கள் வருவார்கள்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here