விஜயகால மகேஸ்வரன் தெரிவித்து கருத்துக்கு எதிராக கறுப்பு பட்டி அணிந்த தலவாக்கலை நகரசபையின் தலைவர்!

0
190

இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரன் தெரிவித்து கருத்துக்கு தலவாகலை லிந்துளை நகரசபையின் மாதந்த பொதுகூட்டத்தில் தலவாகலை நகரசபையின் தலைவர் கறுப்பு பட்டி அணிந்து பொது கூட்டத்தினை நடத்தினார்

இராஜாங்க அமைச்சர் விஜயகால மகேஸ்வரன் அவர்களால் யாழ்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்து கருத்து தொடர்பில் தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்கசேபால கறுப்பு பட்டி அணிந்து மாதாந்த கூட்டத்தினை 05.07.2018.வியாழக்கிழமை இடம் பெற்றது. இன்று இடம் பெற்ற அமர்வின் போது சபையில் அங்கம்வகிக்கின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் கறுப்புபட்டி அணிந்து சபையில் அமர்வு முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவரின் வேண்டுகொளுக்கினங்க நகரசபையின் அங்கம் வகிக்கின்ற அரசசார்பில் அங்கம் வைக்கின்ற ஈஷாரமஞ்சநாயக்க எம்.பரமநாதன் ஆகிய இருவர் கறுப்பு பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்துள்ளனர் நகரசபையின் ஏனைய உறுப்பினர்கள் கறுப்ப பட்டி அணியவில்லை.

இவ்விடயம் தொடர்பில் அசோக்கசேபால தெரிவிக்கையில் கடந்த 30வருடகாலமாக இடம் பெற்ற யுத்தம் காரணமாக மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய இன மக்கள் பல்வேறுபிரச்சனைகளை எதிர் நோக்கியிருந்தனர்.

எனவே இது போன்ற யுத்தத்தை மீண்டும் உறுவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்மென தெரிவித்தார் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இது போன்ற கருத்துகளை தெரிவித்தமையினால் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here