விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா இரத்து ; படக்குழுவின் அறிவிப்பால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்

0
72

லியோ ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாக உள்ளது. நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழாவினை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இரத்து செய்கிறோம்.

நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பேருந்து கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன.

எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இது நடிகர் விஜய் ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here