போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.
இதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.