ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் சகோதரர் சரத் வீரவன்ஸ இன்று பொலிஸ் நிதிகுற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி இவரை கைது செய்யும் நோக்குடன் நிதிகுற்றப்பிரிவு அதிகாரிகள் விமல் வீரவன்ஸவின் வீட்டிற்கு சென்ற வேளை அவர் உடல்நலக் குறைபாடுடன் இருந்ததால் அவரை கைது செய்யவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் விமலின் சகோதரர் சரத் வீரவன்ஸ தற்போது சுகமடைந்துள்ளதால் குறித்த வாகன மோசடி தொடர்பில் விசாரணைகளுக்காக இவர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.