விமான விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை!

0
19

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலங்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடம், குடியிருப்புப் பகுதி என்பதால், அங்கிருந்த கட்டடங்களிலும் தீப்பற்றி எரிந்துள்ளன.

இதனால் ஏராளமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here