விருந்து வைபவத்தில் போதையில் இரு குழுக்கள் மோதல்; இருவர் வைத்திசாலையில்- பொகவந்தலாவையில் சம்பவம்!

0
118

பொகவந்தலாவ டின்சின் நகரபகுதியில் 21.10.2017.இரவு 07.15 மணி அளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றறுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பேர் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய ஒன்பது பேர் கொண்ட குழுவினரில் இருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளதோடு மிகுதி ஏழு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்ய வலைவிரித்துள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் 21.10.2017 சனிகிழமை இடம் பெற்ற விருந்து உபசாரத்தில் இரண்டு குழுவினரும் மது போதையில் இருந்த வேலை ஆரம்பத்தில் வாய்தர்க்கம் ஏற்பட்டு பின்பு மோதலாக மாறியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள இருவரில் ஒருவருக்கு தலைபகுதியிலும் வலது கைபகுதியிலும் தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு மற்றய நபருக்கு வலது கையிலும் வைலது கால்பகுதியிலும் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பேரும் தொடாந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு தாக்குதல் நடத்திய குழுவினருள் தலைமறைவாகியுள்ள ஏழு பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here