நாட்டில் பாற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவற்றை விரைவாக இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது நாட்டில் 12 முதல் 20 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமின் விஜேசிங்க கூறியுள்ளார்.
அத்தோடு, 120 முதல் 150 வரையான அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருந்துகள் 12 நாட்களாக விமான நிலையத்தில் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.