டயகம சந்திரிகாமம் காட்டுப் பகுதியில் விறகு வெட்ட சென்ற இளைஞர் ஒருவர் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து மரணித்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
டயகம தோட்டத்தை சேர்ந்த சூசை சவேரியார் (48) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என தெரிய வருகிறது.
காலையில் விறகு சேகரிப்பதற்காக சந்திரிகாமம் காட்டுப்பகுதிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் ஊர் மக்கள் திரண்டு தேடுதலில் ஈடுபட்டபோது படுகாயங்களுடன் மலையடிவாரத்தில் வீழ்ந்து கிடந்த அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார் என தெரிவிக்கப்பட்டது.