டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்ட சென்ற தாய் ஒருவரின் மீது வெட்டப்பட்ட மரம் சரிந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக மரணித்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் 20.09.2017 அன்று மாலை 6 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர் 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
தனது வீட்டின் தேவைக்கு விறகு வெட்ட சென்றபோது, தாய் விறகு வெட்டிக் கொண்டிருந்த வேளையில் மற்றுமொரு நபர் மரத்தை வெட்டும் பொழுது குறித்த மரத்தின் கீழே மர கிளைகளை தரித்துக் கொண்டிருந்த மேற்படி தாய் மீது மரம் விழுந்ததில் ஸ்தலத்தியே தாய் பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரப்பத்தனை நிருபர்