ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடும் போது அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து நிகழ்நிலை (Online) சூதாட்டத்தில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர், வீடுகளை வாடகை அடிப்படையில் வாங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும் மற்றும் பல்வேறு குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என நிஹால் தல்துவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.