வீட்டுக்கும் நாட்டுக்கு நச்சற்ற உணவு வழங்க கொட்டகலை யதன்சைட் விவசாயிகள் மும்முரம்.

0
180

எமது நாட்டின் பிரதான பேசும் பொருளாக மாறியிருப்பது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த உரத்தட்டுப்படே ஆனால் எவ்வளவு இரசயன உரத்தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இந்த இரசாயன உரத்திற்கு பதிலாக சேதனை பசளையினை பயன்படுத்தி நாட்டிக்கும் வீட்டுக்கும் நச்சற்ற உணவினை பெற்றுக்கொடுத்துக்கொண்டு வருவதாக கொட்டகலை யதன்சைட் பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தங்களது விவசாயத்திற்கு தேவையான உரத்தினையும் செடிகளுக்கு தேவையான மருந்து வகைகளையும் இயற்கையிலிருந்தும் மாட்டுப்பண்ணையிலிருந்தும் கிடைக்கும் சாணம் மற்று கோமியத்தினை பயன்படுத்தி தங்களது விவசாயத்தினை நல்ல முறையில் பாராமறித்து வருவதாகவும். சேதனை பசளையினை தயாரித்து நல்ல வருமானம் பெற்று வருவதாகவும் இதன் மூலம் ஐந்து ஆறு பேருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும் பெருமாள் செங்கத்திர்ச்செல்வன் தெரிவித்தார்.

நீண்ட காலமாக சேதனை பசளை உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் இவர் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி கொழும்பு போன்ற பிற நகரங்களுக்கும் தான் உற்பத்தி செய்யும் சேதனை பசளையினை விற்பனை செய்து வருகிறார். இவருடைய நடவடிக்கையினை கண்காணித்து மேலும் பல விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு தேவையான இந்த சேதனை பசளையினை அவர்களே தயாரித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களால் நாட்டப்பட்டிருக்கு மிளகாய், லீக்ஸ், கொவா, உள்ளிட்ட மரக்கறி செடிகளும் நன்கு வளர்ந்துள்ளன.

இவர்கள் அனைவரது ஒரே நோக்கு வீட்டுக்கும் நாட்டுக்கும் நச்சற்ற மரக்கறிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எமது முன்னோர்கள் நச்சற்ற உணவு வகைகளை உண்டதன் காரணமாகவே அவர்கள் நோய் நொடியின்றி தொன்னூறு நூறு வயது வாழ்ந்து வருவதாகவும் வயோதிப வயதிலும் சலிப்பின்றி வேலை செய்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறான போதிலும் இன்று நாம் நாளுக்கு நாள் நச்சுணவினை சாப்பிட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுத்து நோயாளர்களாக மாறி வருகின்றோம். வருமானத்திற்காகவும், இலகுவில் இலக்கினை அடைவதற்காகவும் நாளாந்தம் இராசயன பொருட்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் எமது பிள்ளைகள் பாரிய பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் முகம் கொடுப்பார்கள் என்று நாம் சிந்திப்பதில்லை. இதனால் ஏற்படுத் பின் விளைவுகள் பற்றி நாம் யோசித்து பார்ப்பதுமில்லை.

எனவே காலம் தாழ்த்தியேனும் அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு இசைவாக்கம் பெற்று அதனூடாக நச்சற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் பாரிய அளவு வருமானத்தினை பெறும் ஒரு துறையாக மாற்றிக்கொள்வது எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு இந்த துறையில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை ஒன்று திரட்டி எமக்கு எமது விவாசாயத்திற்கு தேவையான பசளை மருந்து வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் இந்த உலகையே நாம் வென்று விடுவதோடு பசி பஞ்சமின்றி வாழக்கூடிய சுழுலும் உருவாவதோடு நிலம், நீர் காற்று ஆகியவற்றை பாதுகாத்து பசுமை புரட்சியனை ஏற்படுத்த முடியும் என்பதே அனைவரதும் நம்பிக்கையாகும்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here