குருணாகலிலுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை சுற்றிவளைப்பதற்கு ஆயிரக்கணக்காக மக்கள் நேற்று முன்தினம் சென்ற போது அவர் ஒழிந்ததாக தெரியவந்துள்ளது.
குருநாகல் நகருக்குள் நுழைந்த மக்களை உள்ளே நுழைய விடாமல் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தினர்.
இந்த நிலையில் ஜோன்ஸ்டன் தனது பலத்தை காட்டுவதற்காக சிலரை அழைத்து வந்துள்ளதுடன், மக்களை தாக்குவதற்கும் தயாராக இருந்துள்ளார். எனினும் தான் தாக்கப்படலாம் என்ற அச்சத்திலும் இருந்த ஜோன்ஸ்டன் , கொழும்பு 02, யூனியன் பிளேஸில் உள்ள லிலீ ஸ்ட்ரீடில் அமைந்துள்ள ட்ரைஸ்டார் என்ற ஹோட்டலில் மறைந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஹோட்டல் அவருக்கு சொந்தமானது என்ற போதிலும் அந்த தகவல் இதுவரையில் மறைக்கப்பட்டதாக உள்ளதென தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமைச்சர் ஜோன்டன் மாத்திரமின்றி அமைச்சர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
பயணங்களின் போது பாதுகாவலர்கள் இன்றி சிறிய வாகனங்களில் முகங்களை மறைத்துக் கொண்டு செல்வதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நேற்று இரவு பந்துல குணவர்தனவின் வீட்டையும் மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.