தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர், “தொழிற்சங்கத் துறவி” அமரர் வீ.கே. வெள்ளையனின் 51 ஆவது சிரார்த்த தினம் இன்று டிசம்பர் மாதாம் 2 ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்டது இந்தத் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் தலைமைப் பணிமனையில் வீ.கே. வெள்ளையன் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஷேட பூஜை வழிபாடுகளும், தொடர்ந்து டிக்கோயாவில் அமைந்துள்ள வெள்ளையன் நினைவு ஸ்தூபி அருகில் நினைவஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வுகளில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் ,பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் உட்பட
சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்..