வெகு விரைவில் அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க தீர்மானித்த ரூபா 2500.00 வழங்கப்படும் கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் அவர்கள்.
கேகாலை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட மக்களை சந்திபதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் லெவல தோட்ட தமிழ் பாடசாலைக்கான விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டிருந்த போது அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பானம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் வாழ் பழைய மாணவர்களின்“ஏணி” தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன, எம்.மரியதாஸ், கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர் ஜெகநாதான் மாகாண சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உட்பட பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். இதன் போது மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகீந்து அளிக்கபட்டது.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள்,
தேயிலை, இறப்பரின் விலை குறைந்திருக்கின்றது என்கின்றார்கள் கம்பனிகாரர்கள்.
இதனால் சம்பள அதிகரிப்பு தடைபட்டுள்ளது. இடைகால கொடுப்பனவாக ஒரு நாளைக்கு 100 ரூபா என்ற வீதம் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடினோம்.
இவை குருகிய காலத்தில் இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படும். இந்த தொகையை இன்னும் கம்பனிகள் வழங்க தயக்கம் காட்டுகின்றன.
தற்பொழுது கைச்சாத்திடுவதற்கான உச்சக்கட்ட நிலையில் இருக்கின்றது. இன்னும் ஓர் இரு வாரங்களில் இவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் தோட்ட தொழிலாளர்கள் இதே வேலையை தொடர்ந்து செய்ய முடியுமா என கேள்வி எழும்பி உள்ளது. தற்பொழுது புதிதாக அவுட் கொயிங் சிஸ்டம் ((Out Going System) என புதிய முறை அறிமுகப்படுத்த தோட்ட கம்பனிகள் எண்ணி உள்ளனர்.
அதாவது 100 ஏக்கர் காணி இருந்தால் அதில் 50 ஏக்கரை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து அவர்களே பராமரித்து தேயிலைகளை தொழிற்சாலைக்கு கொடுத்து பணமாக்குவதற்கான நுட்பமே.
இதை செயற்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இவை நடைமுறைப்படுத்தும் சந்தர்பத்தில் தோட்ட மக்களுக்கு தோட்ட மேலும் பல பிரச்சனைகள் உறுவாக உள்ளது ஆகையால் இந்த விடயத்திலாவது தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும்.
இந்த மக்களுக்கு சிறந்த தீர்விணை பெற்றுக் கொடுக்க வேண்யது கட்டாயமானதாகும்.
பா.திருஞானம்