தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்லை தோட்டம் லில்லிஸ்டாண்ட் பிரிவில்; மண் சரிவு அச்சம் காரணமாக 105 குடும்பங்களை சேர்ந்த 340 பேர் குறித்த வீடுகளில் இருந்து வெளியேற்றபட்டு தற்காலிகமாக இறம்பொடை இந்து கல்லூரியில் தங்க வைக்கபட்டள்ளனர்.
இவர்களுக்கான முதற்கட்ட நிவாரணங்ளை கிராம சேவகர் ஊடாக கொத்மலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமை பிரிவு மேற்க் கொண்டு வருகின்றது. இவர்களுடன் தோட்ட பொது மக்கள் தோட்ட நிர்வாகம் அரசியல்வாதிகள் நலன் விரும்பிகளும் இணைந்து நிவாரண பணிகளை மேற்க் கொண்டு வருகின்றனர்.
பா.திருஞானம் .