வெரலப்பத்தன தோட்டப் பாடசாலை கட்டிடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.