வெற்றியின் பின் பிரதமரின் அதிரடி தீர்ப்பு!!

0
112

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு முடி­வுற்­ற­வுடன் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியில் உட­ன­டி­யாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.அத்­துடன் கட்­சியின் பொறுப்­பு­களை புதிய அணி­யொன்­றிடம் சமர்ப்­பித்து கட்­சியை முழு­மை­யாக மறு­சீ­ர­மைத்து அடுத்­து­வரும் மாகா­ண­சபை மற்றும் ஏனைய தேர்­தல்­களில் பல­மு­டைய கட்­சி­யாக போட்­டி­யி­டப்­போ­வ­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கி­ய ­தே­சி­யக்­கட்­சியின் விசேட பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் இத­னைக்­கு­றிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவாதம் நிறை­வ­டைந்­த­துமே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும். கட்­சியின் பொறுப்­புக்­களை புதிய அணி­யொன்­றிடம் சமர்ப்­பித்து தேவை­யான மாற்­றங்­களை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

எதிர்­வரும் மாகா­ண­சபை தேர்தல் மற்றும் ஏனைய தேர்­தல்­களில் பல­மாக கட்­சி­யாக போட்­டி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ருவன் விஜ­ய­வர்த்­தன குழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் ஏனைய யோச­னைகள் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கட்­சியின் புதிய பத­வி­க­ளுக்­கான நிய­மனம் தொடர்பில் எதிர்­வரும் 30ஆம் திக­திக்கு முன்னர் செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­படும். இதற்­காக கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளிடம் ஆலோ­சனை பெறப்­படும். அந்­த­வ­கையில் எதிர்­வரும் 7 மற்றும் 8ஆம்
திக­திகளில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­கு­ழுக்­கூட்­டமும் விசேட பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­கூட்­டமும் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த கூட்­டங்­களில் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும் அத்துடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய குழுவும் நியமிக்கப்படும். இதற்காக கட்சியின் தவிசாளர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்பின்னர் அது குறித்து பாராளுமன்றக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here