பெறுமதி சேர் வரி (VAT) அமுலால் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த வரி திருத்தம் நகர்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களையே கடுமையாக பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரியால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்வடைந்துள்ளது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, பெறுமதி சேர் வரி அமுல் படுத்தலால் ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக மாதாந்தம் 32,000 ரூபாவை வாரியாக செலுத்த வேண்டியுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
இந்த நிலையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.