அம்பகமுவ பிரதேசம் வெலிஓயா மேல் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக மக்களிடம் கையளிக்கபட்டது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இவருடன் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாரம்
மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் எஸ். விஸ்வநாதன் பணிப்பாளர் எம். கனகராஜ்¸ நிர்வாக செயலாளர் முன்னனியின் சிரேஷ்ட பிரதி தலைவர் எஸ்.கிருஸ்ணன் முன்னனியின் பிரதி பொது செயலாளர் ஏம் பிரசாந் உட்பட மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நோர்ட்டன்பிரிட்ஜ் நிருபர் மு. இராமச்சந்திரன் – பா. திருஞானம்