வெலிமடை பிரச்சார கூட்டத்தில் கண்ணாடி போத்தல் தாக்குதல் – வேட்பாளருடன் ஐவர் கைது!!

0
120

பிரச்சார கூட்டத்திற்கு கண்ணாடி போத்தல் தாக்குதல் – வேட்பாளருடன் ஐவர் கைது

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிமடை டயரபா சந்தியில் 05.02.2018 அன்று இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியுடன் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு கண்ணாடி போத்தல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருடன், ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Image may contain: night

ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டம் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு வந்த சிலர் கண்ணாடி போத்தல்களை எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி சுமார் 100ற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தியில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும், வேட்பாளரின் கட்சி காரியலாயமும், ஐக்கிய சேிய கட்சியின் காரியாலயமும் மிகவும் அருகாமையில் அமைந்துள்ளதோடு, மதுபானசாலை ஒன்றும் அப்பகுதியில் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here