நாட்டிற்குள் தங்கக் கடத்தலை தடுக்கும் நோக்கில் 22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இத்தடையை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் காலங்களில் 22 கரட்டுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்