நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து வெளிநாட்டு இறக்குமதி பால்மாவின் விலையில் பாரிய அளவில் உயர்ச்சி ஏற்பட்டுள்ளன. இதனால் இன்று சாதாரண குடும்பங்களைச் சேர்;ந்த எவரும் பால்மா கொள்வனவு செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மலையகப்பகுதியில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் அதிகரித்துள்ள அத்தியவசிய பொருட்களின் விலைகளையடுத்து பசும்பால் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பசுக்களுக்கு தேவையான சத்துணவு மற்றும் மருந்து வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தினால் தற்போது இந்த தொழிலினை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த தொழிலினை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று நாங்கள் 30 ,40 வருடங்களாக இந்த மாடு வளர்ப்பு தொழில் தான் ஈடுப்பட்டு வருகின்றோம் எங்களது ஜீவனோபாயமாக இருந்துள்ளது இந்த தொழில் தான் எங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கும், அவர்களை வளர்த்தாளக்குவதற்கும் இந்த தொழில் எங்களுக்கு உருதுணையாக இருந்துள்ளது. பரம்பரை பரம்பரையாக மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நாங்கள் மாடாய் உழைத்தாலும் இன்றுள்ள சூழ்நிலையில் போதியளவு வருமானம் கிடைப்பதில்லை இதனால் நாங்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகிறோம்.
இன்று மாட்டுக்காக பெற்றுக்கொடுக்கப்படும் புண்ணாக்கு 4950 ரூபாவாக உள்ளது அதனை வீட்டுக்கு கொண்டு வருவதென்றால் 5300 தேவைப்படுகிறது. எங்களிடமிருந்து ஒரு லீற்றர் பால் 80 ரூபா அல்லது 90 ரூபாவுக்கு தான் பெறுகின்றனர் இந்நிலையில் நாங்கள் மாட்டை கவனிப்பதா அல்லது வீட்டை கவனிப்பதா புல் அறுப்பது முதல் துப்பறவு செய்வது, மாடுகளை பராமறிப்பதற்கே எங்களது நேரம் சரியாக உள்ளது இந்நிலையில் நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது எங்களது குழந்தைகளை படிக்க வைப்பது இன்று ஒரு டீக்கு 100 விலை நிர்னைக்கப்பட்டுள்ளது எனவே எங்களுக்கும் அரசாங்கம் சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து பால் உற்பத்தியினை மேம்படுத்த உதவ வேண்டும் வெளிநாட்டு பால் மா இறக்குமதியினை நிறுத்தி அனைவருக்கும் பசும்பால் அல்லது எமது நாட்டில் பால் உற்பத்தியினை அதிகரித்து இந்த நாட்டு மக்களுக்கு சாதாரண விலையில் பால் மாவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதே நேரம் மாடு வளர்ப்பில் ஈடுபடும் சிலர் மாட்டு சாணத்தில் இயற்கை உரத்தினை செய்து அதனை விற்பனை செய்து வருவதுடன் அந்த உரத்தினை பயன்படுத்தி மரக்கறி செய்கையிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் ஒரு சிலருக்கு மாத்திரம் மேலதிக வருமானம் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிட்டியுள்ளன.
எனினும் அதிகமானவர்களுக்கு போதியளவு விளக்கம் மற்றும் போதியளவு இடவசதி இல்லாததன் காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மேலதிக வருமானத்தினை திரட்டிக்கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவ்வாறு மாட்டு சாணத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள விவசாயமும் நல்ல முறையில் செழிப்பாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.