மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக நாவலபிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நாவபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
20.05.2018. ஞாயிற்றுகிழமை பெய்துவரும் கடும் மழையின் காரணமாக நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் அஞ்சல் நிலைத்தில் இருந்து நாவலபிட்டி நகரம் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நாவலபிட்டி நகரத்தில் வர்த்தக நிலையங்களுக்கு அண்மையில் காணபடுகின்ற கால்வாய்களில் நிறைந்து காணப்படுவதாலேயே இந்த நிலைமை எதிர் நோக்கியுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதிஸ்)