வெள்ளிக்கிழமை 16 பேருக்கு மரண தண்டனை – இந்தோனிசியா அறிவிப்பு!

0
193

ஜகார்த்தா – போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனிசியா, வரும் ஜூலை 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில், பாகிஸ்தான் பிரஜை உட்பட 16 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றவுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரியூ சான் உட்பட 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி அனைத்துலக அளவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தோனிசியா, இந்த ஆண்டும் அதே போன்றதொரு தண்டனையை நிறைவேற்றவுள்ளது.

தற்போது தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 16 பேரில், இந்தோனிசியர்களோடு, நைஜீரியா, ஜிம்பாவே, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here