வேலு யோகராஜின் பிரியாவிடை நிகழ்வு 

0
91

நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு  16.03.2023 நுவரெலியா ஹபர் லேக் வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

இதன் போது தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினால் கடந்த 05 வருட காலமாக நுவரெலியா பிரதேச சபைக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பொது மக்களுக்கு அதிகபட்ச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தமது பெறுமதியான நேரத்தினை ஒதுக்கி பெறும் முயற்சியுடன் செயற்பட்டு தரமான சேவையினை பெற்றுக் கொடுத்தமைக்காக தனது கௌரவத்துடனான நன்றியினை தெரிவிக்கும் முகமாக வருகை தந்த முக்கியஸ்த்தர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் தன்னுடைய 05 வருடத்தில் அனைத்து மக்களுக்கும் பாறிய சேவைகளை மேற்கொள்ள சக்தியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபனம், முன்னால் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவரது புதல்வர் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், ஸ்தாபனத்தின் தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,
ஏனைய கட்சியின் முக்கியஸ்த்தர்கள், மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நுவரெலியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், ஏனைய அரச நிறுவன அதிகாரிகள் மற்றும் அன்பிற்கினிய பொது மக்கள் வியாபாரிகள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் நுவரெலியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் தவிசாளர் அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நுவரெலியா மற்றும் கொத்மலை, கொட்டகலை பிரதேச சபையின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், மின்சார சபையின் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகஸ்த்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here