வேலையில்லாத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து, சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டள்ளது.
வேலை கிடைக்காத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டு முதல், 700க்கும் அதிகமான ஆயுள்வேத வைத்திய பட்டதாரி மாணவர்களுக்கு அரசாங்க வேலை பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும், வேலை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் எனினும், எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இதுவரை இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.