வேலைவாய்ப்புக்காக செல்லும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு விசேட பயிற்சித் திட்டம்!!

0
139

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு தொழிலுக்காக செல்லும் மலையக பெருந்தோட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இலங்கையில் செயல்படும் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சிகளை பெற்று அதற்குரிய தகமை
சான்றிதழ்களுடன் தொழிலுக்கு சென்றால் உயர்வான சம்பளமும் தகுதிக்கேற்ற தொழிலையும் பெற்றுக்கொள்ள முடியும்.என பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனர் எஸ்.கே.சந்திரசேகர் தெரிவித்தார். பெருந் தோட்டப்பகுதிகளில் படித்துவிட்டு தொழில் இன்றி இருக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தொழில் தொடர்பான பயிற்சியளிக்கும் விழிப்பூட்டல் நிகழ்வுகள்
ஒன்று அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்டம் ஆலயம் மண்டபத்தில் பிரிடோ நிறுவனம் இணைப்பாளர் எஸ்.ராஜி தலைமயில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பயிற்சியளிக்கும் போதும் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
நமது நாட்டில் தொழில் பிரச்சனைகள் காரணமாக மலையக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் முறையான பயிற்சிகள் மற்றும் வழிநடத்தல்கள் இன்றி தகுதியான தொழிலை உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி பெற்றுக்கொள்ள முடியாத நிலை
அதிகரித்துள்ளது.

இந்த நிலைக்கு காரணம் உள்நாட்டில் தொழில் ரீதியான பயிற்சிகள் வழங்கும் நிலையங்களை தெரிந்து கொள்வதில்லை .எங்கெல்லாம் தொழில் பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றது என்பதை பெருந்தோட்ட இளம் சமூகம் தேடிப்பார்ப்பதும்
குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் முறையான பயிற்சி மற்றும் பயிற்சிக்கேற்ற தகமை சான்றிதழ் இன்றி
உளாநாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தகுந்த தொழில் வாய்புக்களை இந்த இளம் சமூகம் எதிர்பார்ப்பது சிறந்த விடயமாகாது.

நமது நாட்டில் பல நிறுவனங்களில் பல்வேறு தொழில்கள் காணப்படுகின்றது அதற்கான தொழில் வெற்றிடங்களும் அதிகமாக காணப்படுகின்றது. இருப்பினும் அந்த தொழில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பயிற்சிகள் பெற்றுக்கொள்ள இளம் சமூகத்தினர் இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் மற்றும் இன்று நாட்டில் பலபாகங்களிலும் அரசாங்க அனுமதியுடன் வாழ்க்கை மட்டத்தை உயர்த்தி கொள்ளும் வகையில் பல்வேறு தொழில்களில் பயிற்சி பெறுவதற்குறிய நிலையங்கள் காணப்படுகின்றது .இது தொடர்பில் கேட்டால் ஒரு சிலரை தவிர கூடுதலானவர்களுக்கு பயிற்சி நிலையங்கள் கூட தெரிவதில்லை காரணம் தொழில் ஒன்றுக்கான ஏக்கம் காணப்படுகின்றதே தவிர பயிற்சிகளை பெற்றுக்கொண்டு தொழில்களுக்கு செல்வோம்
என்ற எண்ணப்பாடு குறைவு.

ஆகையால் தான் தொழில்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் களுக்கு நமது இளம் சமூகம் திண்டாடும் நிலையுள்ளது.
எனவே எதிர்காலத்தில் நமது நாட்டில் ஏகப்பட்ட தொழில்களில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நிலையில் உருவாக்க கூடும் ஆகையால் இன்றைய இளைய சமூகம் வீணாக தமது நேரங்களை தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தவிர்த்து
தாம் கற்ற கல்விக்கமைய தொழில் ஒன்றை பெற்றுகொள்ள தெழில் பயிற்சி நிலையங்களில் இணைந்து முறையாகவும் விரும்பதக்ககூடிய வகையிலும் தொழில் ஒன்றை தேர்வு செய்து அதற்கான முழுமையான பயிற்சியினை பெற்று கொள்ள
வேண்டும் .

இதற்கு வழிவகுக்கும் வகையில் விழிப்புணர்வை பிரிடோ நிறுவனம் வழங்கும்.இதை பிரயோசனம் படுத்தி எதிர்காலத்தை பலமாக அமைத்து கொள்ள இளம் சமூகம் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த விழிப்பூட்டல் பயிற்சியில் அக்கரப்பத்தனை பிரதேச தோட்டப்பகுதி இளைஞர்கள் யுவதிகள் என படித்துவிட்டு தொழில்க்கு காத்திருக்கும் நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுகொண்டனர்.இதேவேளை நானுஓயா லிந்துலை ஆகிய பகுதிகளிலும் 23 ம் திகதி அன்று நடைபெற்ற பயிற்சிகளில் அதிகமானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here