கொட்டகலை பிரதேச வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் 19.03.2018 அன்று காலை 7.30 மணியளவில் ஆஜரானதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள தவறியதாக தெரிவித்து வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக செயற்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக இவர் மீது பொலிஸ் முறைப்பாட்டை வைத்தியசாலை நிர்வாகம் பதிவு செய்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளும் வரை பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்படப்போவதாக கூறி கடந்த இரண்டு தினங்களாக பணி பகிஷ்கரிப்பை வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த மலர்வாசகம் 19.03.2018 அன்று திங்கட்கிழமை காலையில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)