வைத்தியரை தும்புத்தடியால் வரிந்து கட்டிய மனைவி !யாழில் சம்பவம் !

0
130

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார்.வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

அதன் பின்னரே குறித்த கிளினிக்குக்குள் குடும்பச் சண்டை நடைபெறுவதை பொலிஸார் கண்டுள்ளனர்.

தலை மற்றும் முகத்தில் காயங்களுக்கு உள்ளான வைத்தியரை பொலிஸார் மீட்டு வெளியே கொண்டு வர முயற்சித்தும் அவர் கிளினிக்கை விட்டு வெளியே வராது பொலிஸாரை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்ததாக தெரியவருகின்றது.

அத்துடன் கிளினிக்கின் பாத்றுாம் பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளே இருந்து அவலக்குரல் கேட்கவே அங்கு பொலிஸார் சென்ற போது அரை குறை ஆடையுடன் வைத்தியரின் பெண் உதவியாளர் வெளியே வந்து ஓடிச் சென்று பொலிஸாரின் வாகனத்துக்குள் புகுந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

கழிவறை கதவுக்கு வெளியே தும்புத்தடியுடன் நின்றிருந்த வைத்தியரின் மனைவி குறித்த பெண்ணை பொலிஸ் வாகனம் வரை துரத்தித்துரத்தித் தாக்கிச் சென்ற போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here