தமது சங்கத்தால் இன்று மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கும் வகையில் காணப்படுவதாக சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
அத்துடன் வௌிநாட்டில் பயிற்சி பெற்று திரும்பும் மற்றும் இடமாற்றம் பெற்று செல்லும் வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதில் காணப்படும் சிக்கல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.