வௌர்ளி தோட்டத்தில் பிரிடோ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின விழா!

0
136

அக்கரப்பத்தனை வௌர்ளி தோட்டத்தில் இயங்கும் பிரிடோ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின விழா அமைப்பின் தலைவி திருமதி புவனேஸ்வரி தலைமையில் 11.03.2018 அன்று மாலை 04 மணியளவில் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் நடைபெற்றது.

இதில் 300 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் .இதில் அதிதிகளாக பிரிடோ நிறுவன இணைப்பாளர்களான கே. சின்னையா எஸ் இராசு லிந்துலை தலவாக்கலை பிரதேச இணைப்பாளர் கே. புஸ்பராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பெண்களின் ஊடாக கும்மி கரகாட்டம் மற்றும் நாட்டார் பாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

20180311_123526 20180311_123628 20180311_130033

அக்கரப்பத்தனை நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here