கைது செய்யப்படக் கூடாதவர்கள் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் தீரமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை கைது செய்யக் கூடாது என அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான அமைச்சரவையொன்றை வைத்துக் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வஜிர அபேவர்தன குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு தமது அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் நடத்திய அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.