ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை அகற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் தலைவர் பிரபாத் சத்துரங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.