ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய முதலாம் வருட தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

0
112

விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு மலையக இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் தேர் பவனியும்; நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கொட்டகலை கொமர்சல் புதிய நகரம் குடாஓயா ஹட்டன் நேத்ராபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி தேர் திருவிழா மிக சிறப்பாக நேற்று (31) திகதி நடைபெற்றது.

இந்த தேர் திருவிழா சுபகிருது வருட ஆவணி மாதம் 31 ம் திகதி புதன்கிழமை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணிய வாஜனம், கணபதி ஹோமம், கும்ப பூஜை, பூர்ணாகுதிபூஜை திரவிய அபிசேகம்,என்பன நடைபெற்ற, தேர்பவனி பகல் 1.00 அளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டது.

குறித்த தேர் பவனி மேளதாள இசை முழங்க,கலை கலாசார அம்சங்களுடன் பக்த அடியார்கள் அரோகரா கோசமிட ஆலயத்திலிருந்து ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியூடாக குடாகம சந்திவரை சென்று மீண்டும் திரும்பி கொட்டகலை கேம்பிரிஜ் சந்தி வரை சென்று ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த தேர் பவனியில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு நேற்று பகல் அன்னதானமும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. சமய கிரியைகளை கிரியா ஞானமணி வட கோவை பிரம்ம ஸ்ரீ தேவசேனாபதி சிவாச்சாரியார், யதன் சைட் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவின் நல்லாசியுடன் தேச கீர்த்தி சமூக ஜோதி, சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா அவர்களின் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள இந்து மற்றும் சிங்கள பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here