ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரிக்கு பெருந்தோட்ட மாணவர்களை உள்வாங்குவதில், மாற்று யோசனை முன்வைப்பு!

0
102

ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரிக்கு பெருந்தோட்ட மாணவர்களை உள்வாங்குவதில் 25 வருடங்கள் பெற்றோர்கள் பெருந்தோட்ட பகுதிகளில் தொழில் புரிய வேண்டும் என்பதை ஆகக் குறைந்தது 10 வருடங்கள் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

1. பெருந்தோட்ட மாணவர்களுக்கு தொடர்ந்தும் முன்னுரிமை
2. பெருந்தோட்ட மாணவர்கள் என அடையாளப்படுத்துவதில் இருந்த சில கெடுபிடிகள்
தளர்த்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மாணவர்களை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரிக்கு உள்வாங்கும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.ஏனைய இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவது தொடர்பான புதிய நடைமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.09.2017) கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்வியியல் கல்லூரிகளின் ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார¸மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் வாமதேவன்¸கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகள் அபிவிருத்தி பணிப்பாளர் சு.முரளீதரன்¸கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி.சபாரஞ்சன்¸திறந்த பழ்கலைக்கழக விரிவுரையாளர் டி.ராமதாஸ்¸மகாவலி தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் மனோகரன¸; ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி திருமதி.ரமணி அபேநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்

ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.இந்த கல்லூரி முழுமையாக ஜெர்மன் நாட்டின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.அந்த அரசாங்கத்திற்கும் எமக்கும் இருந்த அன்றைய ஒப்பந்தத்தின் பிரகாரம் 25 வருடங்களுக்கு முழுமையாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே.அந்த 25 வருடங்கள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது.ஆனால் நாம் இன்னும் கல்வியில் முழுமை பெறாத காரணத்தால் இன்னும் 10 வருடங்களுக்கு இதே நடைமுறையை அதாவது பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது
.
அதே வேளை ஏனைய இந்திய வமசாவளி தமிழர்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறான சந்தர்ப்பத்தை உள்வாங்குவது என்பது தொடர்பாகவும் ஆராயப்படுகின்றது.இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.எனவே இது தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.ஒரு சில பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் தொழில் செய்தாலும் அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஏனைய விடயங்கள் தொழில் தருநரால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.எனவே அவர்களுடைய பிள்ளைகளிடம் ஊழியர் சேமலாப நிதி அல்லது வேறு சான்றிதழ்களை கேட்க முடியாது.

மேலும் புதிதாக கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியை இணைத்துக் கொள்வது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் அவிஸ்ஸாவெல்ல¸மற்றும் ஹோமாகமவை அன்டிய பிரதேசங்களில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளை களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் முகமாகவே இதனை உள்வாங்குவது தொடர்பாக கலந்தாலோசித்துள்ளோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் 25 வருடங்களுக்கு மேல் பெருந்தோட்ட துறையில் தொழில் புரிந்திருக்க வேண்டும் என்ற விடயத்தில் அதனை ஆகக் குறைந்தது 10 வருடங்களாக மாற்ற முடியுமா என்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகின்றோம்.ஒரு சிலர் பெருந்தோட்டங்களில் தொழில் செய்யவிட்டாலும் அவர்கள் பெருந்தோட்ட பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.எனவே அவர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.இதே வேளை க.பொ.த உயர்தரத்தில் இரண்டு எஸ் சித்திகள் நீக்கப்பட்டு ஆகக் குறைந்தது 3 எஸ் சித்திகள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது எதிர்காலத்தில் கல்வி மானிப் பட்டம் வழங்கும் நோக்குத்துடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here