இ.போ.ச.சொந்தமான பேருந்தும் முச்சக்ரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து
அட்டன் லெதன்டி தோட்டபகுதியில் இருந்து நோட்டன்பிரீஜ் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியும் நோட்டன் பிரீஜ் பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி காசல்ரீ பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த விபத்து 15.02.2018. வியாழக் கிழமை காலை 08மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
அதிவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி கால்ரீபகுதியில் இருந்து வந்த பேருந்தினை மோதியதன் காரணமாவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக நோட்டன் பிரீஜ் பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் எவருக்கும் எந்த வித காயங்களும் இடம் பெறவில்லையென தெரிவித்த பொலிஸார் இடம் பெற்ற விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை நோட்டன் பிரீஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஜ்.சதிஸ்)